ஒருவரை ஒருநாள் ஏமாற்றலாம்; இரு நாள் ஏமாற்றலாம். நீண்ட நாட்களுக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க இயலுமா?
இயலாது என உடனே கூறி விடாதீர்கள்.
இங்கே இயலும் என்பதை ஒரு மிகப் பெரியக் கூட்டமே காட்டிக் கொண்டிருக்கிறது. ஆம்.
நேற்றைய தினம் ஈஸ்டர், அதாவது மீட்பர் இயேசு உயிர்த்தெழுந்த நாள் - அவ்வாறு நாங்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளோம். நம்ப வைக்கப்பட்டுள்ளோம் என நான் கூற என்ன காரணம் என்பதை இப்பதிவின் இறுதியில் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.
ஈஸ்டருக்கு வருவோம்.
ஈஸ்டர் தினம் வருடம் தோறும் ஞாயிற்றுக் கிழமை வருவதை அனைவரும் அறிவர். அதற்கு முந்தைய வெள்ளி அன்று இயேசு உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் தனது உயிரை ஒப்புவித்தார் எனக் கூறி துக்க வெள்ளியாக அனுஷ்டிக்கின்றனர்.
அதாவது இயேசு உயிருடன் இருக்கும் பொழுது கூறிய "சிலுவையில் ஒப்புவிக்கப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்" எனக் கூறியது நடந்தது என கிறிஸ்தவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இது உண்மையா? பைபிள் இதனைக் குறித்து என்ன கூறுகிறது என்பதைக் கவனித்தால் உண்மை விளங்கும்.
தனது இறப்புக்கு முன் தான் உயிர்த்தெழுவதைக் குறித்து ஒரு அடையாளம் கேட்ட மக்களிடம் இயேசு கீழ்கண்டவாறு கூறுகிறார்.
40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.(மத்தேயு)
முன்னர் இறைவாக்கு அருளப்பட்ட யோனா(விரிவாக நெகேமியாவில் கிடைக்கும்) கர்த்தரிடமிருந்துத் தப்பியோட முனைந்தப் பொழுது கடலில் தூக்கி எறியப்பட்டு மீன் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்தார். அதனைக் குறிப்பிட்டே இயேசு இங்கு இவ்வாறு குறிப்பிடுகிறார்.
இங்கு கவனிக்க வேண்டியது இயேசு எடுத்துக் கூறும் வார்த்தை "மூன்று பகல் மூன்று இரவு" என்பதாகும். சாதாரணமாக மூன்று நாள் என்றால் இன்றையக் கணக்குப் படி நாம் 72 மணி நேரம் என்போம். ஆனால் இவ்வாறு நேரக் கணக்குக் கூறுதல் 2000 வருடங்களுக்கு முன் சாத்தியமில்லை. அதனாலேயே முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி "மூன்று பகல் மூன்று இரவு" என்கிறார்.
அதாவது தான் மரணித்தப் பின் சரியாக மூன்று இரவு மூன்று பகல் கடந்தப் பின் உயிர்த்தெழுவதாகக் கூறுகிறார்.
அவர் மரணித்த நேரம் பைபிள் கணக்குப் படி:
மதியம் மூன்று மணிக்குப் பின்னர்(மத்தேயு: அதிகாரம் 27 வசனம் 46௫0)
தற்பொழுது உலக அளவில் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையை இயேசு உயிர்த்தெழுந்த நாளாக - ஈஸ்டர் எனக் கொன்டாடுகின்றனர்.
பைபிள் கூறுவதை வைத்துக் கணக்கிட்டால்...
இயேசு மரணித்த நாள் வெள்ளி மாலையையும் கணக்கில் ஒரு பகலாக இணைத்துக் கொண்டால்...
வெள்ளி : பகல் 1 இரவு 1
சனி : பகல் 1 இரவு 1
ஞாயிறு : பகல் 1 இரவு 1
ஈஸ்டர் - அதாவது தற்போதைய நேரக் கணக்குப்படி இயேசு மரணித்தப் பின் உயிர்த்தெழுந்தது திங்கள் கிழமை மாலை மூன்று மணிக்குப் பின்னராக இருக்க வேண்டும். அல்லது மேலே கூறியக் கணக்குப் படி அவர் மரணித்த வெள்ளி மாலையையும் ஒரு பகலாகக் கணக்கிட்டால் குறைந்தப் பட்சம் திங்கள் கிழமை அதிகாலையாக இருக்க வேண்டும்.
ஆனால் அவர் உயிர்த்தெழுந்ததைக் குறித்து பைபிள் என்ன கூறுகிறது தெரியுமா?
மரணித்த இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இயேசுவின் கல்லறையை ஞாயிறன்று அதிகாலை(4 சுவிஷேஷங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் யோவான் சுவிஷேஷத்தில் சூரியன் உதிக்கும் முன் இருள் விலகுவதற்க்கு முன்பே எனக் காணப்படுகிறது: பார்க்க யோவான்: அதிகாரம் 20)ப் பார்க்கச் சென்ற மரியாக்கள் அதற்கு முன்னரே இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாக வான தூதரால் அறிவிக்கப்படுகிறார்கள்(இதிலும் மற்றொரு குளறுபடி உள்ளது. அதனை அடுத்தப் பதிவில் கூறுகிறேன்).
அதாவது ஞாயிறு அதிகாலை சனியின் இரவு விலகும் முன்னரே இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாகப் பைபிள் கூறுகிறது.
அவ்வாறு நோக்கினால் வெள்ளி மற்றும் சனியின் இரு இரவுகள் மற்றும் சனியின் ஒரு பகல் பொழுது கடந்த உடனேயே இயேசு உயிர்த்தெழுந்து விட்டார்.
அதிகபட்சமாக வெள்ளியின் மாலையை ஒரு பகலாக இணைத்துக் கொண்டாலும் இரு பகல் இரு இரவு முடியும் முன்பே சிலுவையில் மரணித்த இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாக அதே பைபிள் கூறுகிறது.
அதாவது பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இயேசுவின் கூற்றான, "மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்" என்பதற்கு மாற்றமாக அதிகபட்சம் இரு பகல் இரு இரவு முடியும் முன்னரே இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாக பைபிளும் அதனை அப்படியே கண்ணை மூடி ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும் நம்பிக் கொண்டாடுகின்றனர்.
உலகில் இதனை விட மிகப் பெரிய ஏமாற்று அல்லது அதி முட்டாள்தனம் வேறு ஏதாவது இருக்குமா?
மதத்தின் மீதான நம்பிக்கை மக்களை 2000 வருடங்களுக்கும் மேலாக அடிமுட்டாள்களாக ஆக்கி வைத்திருப்பது கிறிஸ்தவத்தினால் மட்டுமே முடியக் கூடியது என்றாலும் அது மிகையாக இராது.
நன்றி: ஈஸ்டர்: உலக மகா ஏமாற்று!
Showing posts with label கிறிஸ்துவம். Show all posts
Showing posts with label கிறிஸ்துவம். Show all posts
Wednesday, March 26, 2008
ஈஸ்டர்: உலக மகா ஏமாற்று!
Subscribe to:
Posts (Atom)